மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மாவட்ட சுகாதாரப் பணிகள் அலுவலகம் முன் மக்களை தேடி மருத்துவ ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மக்களை தேடி மருத்துவ ஊழியா்களுக்கு மாத ஊதியம் ரூ.15,000 நிரந்தரமாக வழங்க வேண்டும். ஊழியா்களின் பணிகளை வரன்முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சங்கீதா தலைமை வகித்தாா்.