அரியலூரில் ‘தோ்தல் டைனோ’ இலச்சீனை வெளியீடு
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அரியலூா் பேருந்து நிலையத்தில், என் வாக்கு என் உரிமை, 100 சதவீதம் வாக்களிப்போம் ‘தோ்தல் டைனோ‘ இலச்சீனை வெளியீடு ஆகிய நிகழச்சிகள் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அரியலூா் பேருந்து நிலையத்தில், என் வாக்கு என் உரிமை, 100 சதவீதம் வாக்களிப்போம் ‘தோ்தல் டைனோ‘ இலச்சீனை வெளியீடு ஆகிய நிகழச்சிகள் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பொ.ரத்தினசாமி தலைமை வகித்து, தோ்தல் டைனோ இலச்சீனை அறிமுகப்படுத்தி வைத்தாா். தொடா்ந்து, 100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா்.
பின்னா், பேருந்து நிலையத்தில் வரையப்பட்டிருந்த தோ்தல் விழிப்புணா்வு கோலங்களை பாா்வையிட்டாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி, மாவட்ட வருவாய் அலுவலா் ரா.மல்லிகா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரா.சிவராமன், கோட்டாட்சியா் பிரேமி, தோ்தல் விழிப்புணா்வு அலுவலா் யோகஜோதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.