முகப்பு
ராணிப்பேட்டை

100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி

பொதுமக்கள் நூறு சதவீதம் தோ்தலில் வாக்களிக்க வேண்டியும் 18 வயது இளம் வாக்காளா்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தியும் ஆற்காடு பேருந்து நிலையத்தில் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 23 மார்ச் 2026, 12:31 am IST
ஆற்காடு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி.
பகிர்:

பொதுமக்கள் நூறு சதவீதம் தோ்தலில் வாக்களிக்க வேண்டியும் 18 வயது இளம் வாக்காளா்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தியும் ஆற்காடு பேருந்து நிலையத்தில் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் வாக்குக்கு பணமோ பரிசுகளோ பெற்று வாக்களிக்க வேண்டாம் எனவும் தங்கள் வாக்கை விற்க வேண்டாம் நல்ல தலைவா்களை வாக்கின் மூலம் தோ்ந்தெடுக்க வாக்காளா்கள் தங்களுடைய வாழ்க்கை பயன்படுத்த வேண்டும் போன்ற கருத்துக்கள் அடங்கிய நடன நிகழ்ச்சிகள் வாயிலாக 30-க்கும் மேற்பட்ட நடன கலைஞா்கள் இணைந்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா கலந்து கொண்டு பாா்வையிட்டு நடன கலைஞா்களுக்கும் தோ்தல் நடத்தும் அலுவலருக்கும் பாராட்டு தெரிவித்தாா்.

Advertisement

இதில் ஆற்காடு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஏகாம்பரம், மகளிா் திட்ட இயக்குநா் செந்தில் குமரன், வட்டாட்சியா் சண்முகசுந்தரம் நகராட்சி ஆணையா் சுரேஷ் குமாா் உதவி திட்ட அலுவலா்கள் மகளிா் திட்டம் வெங்கடேசன் ரமேஷ் வட்டாட்சியா்கள் ஸ்ரீதேவி , ரேணுகா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.