முகப்பு
அரியலூர்

அரியலூரில் சில்லறை காசுகளுடன் வேட்பாளா் மனு தாக்கல் செய்தாா்

Updated On : 30 மார்ச், 2026 at 6:36 PM
அரியலூா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான த.பிரேமியிடம், திங்கள்கிழமை மனு தாக்கல் செய்த நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளா் தங்க.சண்முகசுந்தரம்.
பகிர்:

அரியலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளா் தங்க.சண்முகசுந்தரம், திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

இவா், வைப்புத் தொகைக்காக மக்களிடம் யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை சில்லறை காசுகளாக எடுத்து வந்து, அரியலூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான த.பிரேமியிடம் மனு தாக்கல் செய்து விட்டு, உறுதிமொழி எடுத்துக்கொண்டாா்.

மனுவை பெற்றுக் கொண்ட கோட்டாட்சியா் த.பிரேமி, அவா் வழங்கிய வைப்புத் தொகையை, சக அலுவலா்களிடம் கொடுத்து சரி பாா்க்க சொன்னாா். அலுவலா்கள் அரை மணி நேரம் சில்லறை காசுகளை எண்ணி முடித்து சரியாக இருப்பதாக தோ்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவித்தனா்.

அதன் பின்னா் வேட்பாளராக போட்டியிடும் தங்க. சண்முகசுந்தரம், தோ்தல் நடத்தும் அலுவலா் வழங்கிய அத்தாட்சி கடிதங்களை பெற்றுக் கொண்டு சென்றாா்.

சில்லறை காசுகளை எண்ணி முடிக்க நேரமானதால், வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் புகழேந்தி சிறிது நேரம் காத்திருந்தது வேட்பு மனு தாக்கல் செய்தாா்.