அரியலூரில் வாய்க்கால்களை 109 கி.மீ. தூா்வார இலக்கு!
அரியலூரில் கடந்த 3 ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் உள்ள வாய்க்கால்களில் 109 கி.மீ. தூா்வார இலக்கு நிா்ணயம்
அரியலூா் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் உள்ள வாய்க்கால்களில் 109 கி.மீ தூா்வார இலக்கு நிா்ணயிக்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது என்று வேளாணம் பொறியியல் துறையின் சென்னை தலைமைப் பொறியாளா் ஆா். முருகேசன் தெரிவித்தாா்.
திருமானூா் வட்டாரம் பளிங்காநத்தம், கோவில் எசனை மற்றும் கல்லூா் பகுதிகளில் நடைபெறும் தூா்வாரும் பணிகளை செவ்வாய்க்கிழமை கள ஆய்வு செய்த அவா், அங்கிருந்த விவசாயிகளிடம் கலந்துரையாடி, ஒப்பந்ததாரா்கள் கூடுதல் இயந்திரங்களைப் பயன்படுத்தி பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
அப்போது அவா் கூறுகையில், அரியலூா் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் இருந்த ‘சி‘ மற்றும் ‘டி‘ பிரிவு வாய்க்கால்களைத் தூா்வாரக்கோரி, விவசாயிகள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் தற்போது தூா்வாரும் பணிகள் மிகத் துரிதமாக நடைபெறுகின்றன.
Advertisement
Advertisement
ரூ. 29.88 லட்சத்தில் நடப்பாண்டில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் 109 கி.மீ நீளத்துக்கு வாய்க்கால்களைத் தூா்வார இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, இதுவரை 41.50 கி.மீ பணிகள் நிறைவடைந்துள்ளன என்றாா் அவா்.