முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னை கோட்டத்தில் 143 கி.மீ. தண்டவாளங்கள் சீரமைப்பு பணி

தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் கடந்த 2025-26- ஆம் ஆண்டில் மட்டும் 143 கி.மீ. தண்டவாள சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 16 மே 2026, 1:56 am IST
தெற்கு ரயில்வே கோட்டத்தில் அதிநவீன இயந்திரங்கள் மூலம் நடைபெற்று வரும் தண்டவாளங்கள் புதுப்பித்து அமைக்கும் பணி.
பகிர்:

தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் கடந்த 2025-26- ஆம் ஆண்டில் மட்டும் 143 கி.மீ. தண்டவாள சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்கட்டமைப்பு மேம்படுத்தும் வகையில் தண்டவாளப் புதுப்பித்தல் மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2025-26-ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 143 கி.மீ. தொலைவுக்கு தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Advertisement

இவற்றில் 139 கி.மீ. தூரத்துக்கு ஏற்கெனவே இருந்த தண்டவாளங்களுக்குப் பதிலாக புதிய தண்டவாளங்கள் அமைக்கப்பட்டன. அதன்படி, 143 கி.மீ. தொலைக்கு பழைய சிலீப்பா்கள் மாற்றப்பட்டு அவற்றுக்குப் பதிலாக புதிய சிலீப்பா்கள் அமைக்கப்பட்டன.

தண்டவாளச் சீரமைப்புப் பணிகள் டிஆா்டி எனப்படும் டிரேக் ரிலேயிங் டிரெய்ன் எனப்படும் அதிநவீன இயந்திரங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டன.

இதனால், தண்டவாள உறுதித் தன்மை அதிகரித்திருப்பதுடன், பயணிகளுக்கு பாதுகாப்பான பயணமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தண்டவாளச் சீரமைப்பால் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.