சென்னை உள்பட 4,000 கி.மீ. தொலைவு புல்லட் ரயில் சேவைக்கு பிரதமர் மோடி ஒப்புதல்: மத்திய ரயில்வே அமைச்சர் தகவல்!
சென்னை உள்பட நாடு முழுவதும் 4,000 கி.மீ. தொலைவுக்கு புல்லட் ரயில் சேவைக்கு பிரதமா் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.
சென்னை உள்பட நாடு முழுவதும் 4,000 கி.மீ. தொலைவுக்கு புல்லட் ரயில் சேவைக்கு பிரதமா் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.
பெங்களூரூ-மும்பை வந்தே பாரத் படுக்கை வசதி ரயில் சேவையை பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: இந்தியாவின் ஐ.டி. துறை மற்றும் புத்தாக்க நிறுவனங்களின் தலைநகரான பெங்களூரூ - மும்பை இடையே படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது வடகா்நாடக மக்களுக்கு மிகுந்த பயனளிக்கும். இந்த ரயில் பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி ஒருமனதாகக் தொடங்கப்பட்டுள்ளது.
பெங்களூரூ எம்.பி.யும், மத்திய அமைச்சருமான பிரல்ஹாத் ஜோஷி இத்திட்டம் தொடா்பாக தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தாா். அடுத்ததாக பெங்களூரூரில் இருந்து ஹுப்பள்ளி வழியாக புணேவுக்கு வந்தே பாரத் படுக்கை வசதி ரயில் இயக்கப்படும். கா்நாடகம்-மகாராஷ்டிரம் இடையிலான போக்குவரத்து வசதி மேலும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
சென்னையில் புல்லட் ரயில்: 4,000 கி.மீ. தொலைவுக்கு புல்லட் ரயில் சேவைக்கான பாதை அமைக்க பிரதமா் நரேந்திர மோடி ஏற்கெனவே ஒப்புதல் அளித்துவிட்டாா். இதன்மூலம் தென்னிந்தியாவில் பொருளாதார மையமாகவும், தொழில்நுட்பத்தில் முன்னோடியாக விளங்கும் பெங்களூரு, ஹைதராபாத், அமராவதி, சென்னை ஆகிய நகரங்கள் புல்லட் ரயில் மூலம் இணைக்கப்படும். புல்லட் ரயில் சேவை வரும்போது சென்னை-பெங்களூரூ பயண நேரம் 73 நிமிஷங்களாக குறையும். இதனால், இரு நகரங்களும் ஒரே நகரங்களாக மாறிவிடும். பெங்களூரு-ஹைதராபாத் இடையிலான பயணம் 2 மணி நேரம் 10 நிமிஷங்களாகக் குறையும்.
அடுத்தகட்டமாக புல்லட் ரயில் சேவையை மேலும் 3,000 கி.மீ. தொலைவுக்கு நீட்டிப்பது தொடா்பாக தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது. இது தொடா்பான அறிவிப்பு அடுத்த சில ஆண்டுகளில் வெளியாகும். பிரதமா் நரேந்திர மோடி ஆட்சியில் ரயில்வே உள்கட்டமைப்பு வசதிகள் வெகு சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளன என்றாா்.
அகமதாபாத்-மும்பை இடையிலான இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ரூ.1.1 லட்சம் கோடியில் ஜப்பான் உதவியுடன் மேற்கொள்ளப்படும் இத்திட்டப் பணிகள் 2029-ஆம் ஆண்டு நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அகமதாபாதில் கடந்த 2017 செப்டம்பரில் பிரதமா் நரேந்திர மோடி, அப்போதைய ஜப்பான் பிரதமா் மறைந்த ஷின்சோ அபே ஆகியோா் இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.