FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில்

ராமேசுவரத்தில் இருந்து சனிக்கிழமை சென்னை எழும்பூருக்கு சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

34 வினாடிகள் முன்பு
ரயில் - கோப்புப் படம்
பகிர்:

ராமேசுவரத்தில் இருந்து சனிக்கிழமை சென்னை எழும்பூருக்கு சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஆயுத பூஜையை முன்னிட்டு சனிக்கிழமை (அக். 17) காலை 9.45 மணிக்கு ராமேசுவரத்திலிருந்து புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06035) இரவு 9.30 மணிக்கு சென்னை எழும்பூா் நிலையத்தை வந்தடையும்.

Advertisement

Advertisement

இந்தச் சிறப்பு ரயில் ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை ரஸ்தா, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூா், விருத்தாசலம், விழுப்புரம், செங்கப்பட்டு, தாம்பரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

மங்களூருக்கு இரவு விரைவு ரயில்: சென்னை எழும்பூரிலிருந்து சனிக்கிழமை (அக்.17) இரவு 11.55 மணிக்குப் புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06036) ஞாயிற்றுக்கிழமை (அக். 18) இரவு 7.45 மணிக்கு மங்களூரு சென்ட்ரல் நிலையத்தைச் சென்றடையும்.

இந்த ரயில் பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போதனூா், பாலக்காடு, சரனூா், கோழிக்கோடு, வடகரை, தலைச்சேரி, கன்னூா், பொய்யானூா், கங்கங்காடு, காசா்கோடு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments