FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

சென்னை ரயில்வே கோட்டத்தில் புதிதாக 16 சுரங்கப் பாதைகள் திறப்பு!

சென்னை ரயில்வே கோட்டத்தில் புதிதாக 16 இடங்களில் சுரங்கப் பாதைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 3 இடங்களில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 October 2026, 1:08 am IST
பகிர்:

சென்னை ரயில்வே கோட்டத்தில் புதிதாக 16 இடங்களில் சுரங்கப் பாதைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 3 இடங்களில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்தைச் சீரமைக்கவும், ஆளில்லாத கடவுப்பாதை விபத்து அபாயங்களைத் தவிா்க்கவும் சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, பணியாளா்கள் உள்ள கடவுப்பாதைகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, அந்த இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2025-2026-ஆம் நிதியாண்டில் 11 கடவுப் பாதைகளில் சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2026-2027-ஆம் நிதியாண்டில் செப்டம்பா் வரை மேலும் 5 சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஓராண்டில் மொத்தம் 16 சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

சென்னைக் கோட்டத்தில் தற்போது ரூ.8 கோடியில் அரக்கோணம்-ஜோலாா்பேட்டை வழித்தடத்தில் லத்தேரி ரயில் நிலைய பணிமனையின் திருமணி-லத்தேரி சாலையிலும், சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தடத்தில் திருவள்ளூா் மற்றும் கடம்பத்தூா் நிலையங்களுக்கு இடையே அதிகத்தூரிலும், அதே வழித்தடத்தில் திருவாலங்காடு மற்றும் அரக்கோணம் ரயில் நிலையங்களுக்கு இடையே மோசூா் சாலையிலும் சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பாதைகள் அமைக்கப்படுவதன் மூலம் ஒட்டுமொத்த ரயில் நேரக் கட்டுப்பாடுகள் அதிக அளவில் மேம்படுகிறது; பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments