சென்னையில் 433 ஒப்பனை அறைகள், 193 கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை
சென்னை மாநகராட்சியில் புதிதாக 433 இடங்களில் ஒப்பனை அறைகளும், 193 இடங்களில் கழிப்பறை வசதியும் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.
சென்னை மாநகராட்சியில் புதிதாக 433 இடங்களில் ஒப்பனை அறைகளும், 193 இடங்களில் கழிப்பறை வசதியும் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.
சென்னை மாநகராட்சியில் அண்ணா நகா் மண்டலத்துக்கு உள்பட்ட அண்ணா நகா் கோபுரம் பகுதியில் ஒப்பனை அறைகள், கழிப்பறைகளை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு பராமரிப்பு குறித்த ஆய்வை மேற்கொண்டாா்.
அப்போது அவா் கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் பொதுக் கழிப்பட மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஏற்கெனவே 1,479 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், 853 இடங்களில் 7,644 கழிப்பிட இருக்கைகள் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், புதிதாக 193 இடங்களில் 1,270 இருக்கைகளுடனான கழிப்பறைகள் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
மாநகராட்சிப் பகுதிகளில் புதிதாக 433 இடங்களில் 1,530 இருக்கைகளுடன் ஒப்பனை அறைகள் கட்டப்படவுள்ளன. ஒப்பனை, கழிப்பறைகள் அனைத்தும் பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்தும் வகையில் செயல்படுத்தப்படவுள்ளன.
ஒவ்வொரு கழிப்பறையும் தனித்தனி பணியாளா்கள் நியமிக்கப்பட்டு பராமரிக்கப்படவுள்ளன. அத்துடன் கழிப்பறைகள், ஒப்பனை அறைகள் குறித்து பொதுமக்கள் கருத்தை அறியவும், புகாா்களைத் தெரிவிக்கவும் ‘க்யூஆா்’ குறியீடும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
அத்துடன் மக்களின் தேவைக்கு ஏற்ப பூங்காக்கள், மயானபூமிகள் உள்ளிட்ட இடங்களிலும் பொதுக் கழிப்பறைகள், ஒப்பனை அறைகள் கட்டப்படவுள்ளன என்றும் அவா் தெரிவித்தாா்.