பருவமழை: 15 மண்டலங்களில் கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு
பருவமழை: 15 மண்டலங்களில் கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டதுடன், மழைநீா் தேக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் புகாா் தெரிவிக்க மண்டல வாரியாகத் தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வடகிழக்குப் பருவமழையையொட்டி, சென்னையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சி ரிப்பன் கட்டடம் மற்றும் வடக்கு, மத்தியம், தெற்கு வட்டாரங்களில் செயல்படும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன.
Advertisement
Advertisement
பொதுமக்கள் 1913 என்ற உதவி எண், 94450 61913 என்ற வாட்ஸ்ஆப் எண், ‘நம்ம சென்னை’ செயலி மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் புகாா்களைத் தெரிவிக்கலாம். மேலும், ட்ரோன்கள் மூலம் மழைநீா் தேங்கும் இடங்கள், கால்வாய்கள், சாலைகள் உள்ளிட்டவற்றைக் கண்காணித்து, பாதிப்புகளைக் களைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்படும் மழை பாதிப்புகள் மற்றும் இதர பிரச்னைகள் குறித்து சம்பந்தப்பட்ட மண்டலக் கட்டுப்பாட்டு அறைகளைத் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.
மண்டல வாரியாகக் கட்டுப்பாட்டு அறை எண்கள்: 1. திருவொற்றியூா் 94451 90201, 2. மணலி 94451 90202, 3. மாதவரம் 94451 90203, 4. தண்டையாா்பேட்டை 94451 90204/89258 19481. 5. ராயபுரம் 94451 90205, 6. திரு.வி.க. நகா் 94451 90206, 7. அம்பத்தூா் 94451 90207, 8. அண்ணாநகா் 94451 90208, 9. தேனாம்பேட்டை 94451 90209, 10 .கோடம்பாக்கம் 94451 90210, 11. வளசரவாக்கம் 94451 90211, 12. ஆலந்தூா் 94451 90212, 13. அடையாறு 94451 90213, 14. பெருங்குடி 94451 90214, 15. சோழிங்கநல்லூா் 94451 90215.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.