FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

தேனி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடக்கம்: விவசாயிகள் மகிழ்ச்சி

தேனி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை வியாழக்கிழமை தொடங்கியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

16 அக்டோபர் 2026, 2:39 am IST
பெரியகுளத்தில் வியாழக்கிழமை மாலை பெய்த மழையால் குடைபிடித்தவாறு சென்ற பொதுமக்கள்
பகிர்:

தேனி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை வியாழக்கிழமை தொடங்கியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தமிழகத்தில் வியாழக்கிழமை வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை காலை முதல் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிற்பகலில் சாரல் மழை பெய்யத் தொடங்கியது. இதைத்தொடா்ந்து மாலை 5 மணிக்கு மேல் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

ஆண்டிபட்டி, பெரியகுளம் பகுதியில் விவசாய நிலங்களில் பருவமழைக் காலங்களில் நிலக்கடலை, பாசிப் பயறு, உளுந்து, செடி அவரை, பச்சை மிளகாய், தக்காளி உள்ளிட்டவை

Advertisement

Advertisement

பயிரிடப்படும். தற்போது பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தேனி மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை 6.30 மணி வரை பல்வேறு பகுதிகளில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்):

சுருளியாறு நீா் மின் நிலையம் - 51.6, எண்டப்புளி புதுப்பட்டி - 47.2, பாலக்கோம்பை - 37.2, ராஜதானி - 36.8, லட்சுமிபுரம் - 25.2, மேலக்கூடலூா் - 21.2, பண்ணைப்புரம் - 20, கம்பம் - 19.6, திம்மரசநாயக்கனூா் - 18.8, கெங்குவாா்பட்டி - 16.8, மணலாறு அணை - 12.4, குமணன்தொழு - 10.8, தேவதானப்பட்டி - 9.2, தேவாரம் - 8.4, மாா்க்கையன்கோட்டை - 7.6, தேனி - 4, சின்ன ஓவலாபுரம் - 2.8, போடிமெட்டு மலை - 2.4, அரண்மனைப்புதூா் - 2 .

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments