முகப்பு
கரூர்

கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாகம்பம் நடுதலுடன் தொடக்கம்

: கரூரின் புகழ் பெற்ற மாரியம்மன் திருக்கோவில் திருவிழா கம்பம் நடுதலுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

Updated On : 13 மே 2013, 1:41 am IST
பகிர்:

: கரூரின் புகழ் பெற்ற மாரியம்மன் திருக்கோவில் திருவிழா கம்பம் நடுதலுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இநதக் கோவிலின் திருவிழா மே 12 முதல் ஜூன் 9 வரை நடைபெறவுள்ளது. திருவிழாவின் முதல் நாள் நிகழச்சியான கம்பம் வழங்குதல் மற்றும் கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை காலை முக்கிளைகள் கொண்ட கம்பம் பாலம்மாள்புரம் விளையாட்டுத் திடலில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், வலங்கி மூப்பன் வகையறாவைச் சேர்ந்த வி.எம். செந்தில்குமார், எஸ். வினோத்குமார் ஆகியோரால் சுமக்கப்பட்டு மங்கல வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

Advertisement

Advertisement

ஊர்வலத்தில் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, கரூர் மக்களவை உறுப்பினர் மு. தம்பிதுரை, கரூர் நகர்மன்றத் துணைத் தலைவர் ஏ.ஆர். காளியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட கம்பம் மாரியம்மன் கோவிலில் வழங்கப்பட்டது. பின்னர் மாலையில் அந்தக் கம்பம் அமராவதி ஆற்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அமராவதி ஆற்றிலிருந்து ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது.

வழியெங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்து புனித கம்பத்தை வழிபட்டனர். பின்னர், புனித கம்பம் திருக்கோவில் வளாகத்தில் நடப்பட்டது. இதையொட்டி, ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று மாரியம்மனை வழிபட்டனர்.  கரூர் நகர போலீஸார் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.