முகப்பு
கரூர்

குற்ற வழக்குகளில் தொடர்புடையோர் கைது

கரூரில் அண்மையில் போலீஸார் மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டையில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக பலர் கைது செய்யப்பட்டனர்.

Updated On : 13 மே 2013, 1:42 am IST
பகிர்:

கரூரில் அண்மையில் போலீஸார் மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டையில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக பலர் கைது செய்யப்பட்டனர்.

கரூரில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அண்மையில் 2 நாள்கள் மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிகளை விற்றதாக வெங்கமேட்டைச் சேர்ந்த ராஜா, கரூர் தேர் வீதியைச் சேர்ந்த சுந்தரம், பங்களா தெருவைச் சேர்ந்த பழனிச்சாமி, தான்தோன்றிமலை ராஜேந்திரன், பள்ளபட்டி சவுந்திராபுரம் கருப்புச்சாமி, மகாதானபுரத்தைச் சேர்ந்த தமிழரசன், எழுநூற்றுமங்கலத்தைச் சேர்ந்த சந்திரசேகர், பெட்டாவாய்த்தலையைச் சேர்ந்த ஞானசேகர், கிழக்கு அய்யம்பாளையத்தைச் சேர்ந்த ஆண்டிவடிவேல் ஆகிய 9 பேர் கைதானர்.

Advertisement

Advertisement

விபசார வழக்கில் 8 பேரும், 500 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக யாகூப் என்பவரும் கைது செய்யப்பட்டனர்.

மாவட்டத்தில் உள்ள 6 வெடிமருந்து குடோன்களும் தணிக்கை செய்யப்பட்டன. பழைய குற்றவாளிகள் 39 பேர் விசாரிக்கப்பட்டனர்.  அனுமதி பெறாமல் இரட்டை மாட்டுவண்டியில் மணல் அள்ளியதாக 2 வழக்குகள் பதியப்பட்டன.

அனுமதியின்றி மது விற்றதாக 27 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மேலும் கரூர் மாவட்டத்தில் உள்ள 230 திருமண மண்டபம், தங்கும் விடுதிகள் தணிக்கை செய்யப்பட்டதில், சந்தேக நபர்களை விசாரணை செய்து 45 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.