கரூர்

அரவக்குறிச்சி, அணைப்பாளையத்தில் மழை

DIN

கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, அணைப்பாளையத்தில் வியாழக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.
தமிழகத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த இரு தினங்களாக வங்கக்கடலில் உருவான மேலடுக்கு சுழற்சியால் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளாகவே போதிய மழை பெய்யாததாலும், காவிரி ஆற்றில் தொடர்ந்து மணல் அள்ளப்படுவதாலும் நீர்மட்டம் குறைந்து கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் கோடை வெப்பம் 109 டிகிரியையும் தாண்டுவதால் மக்கள் மழை பெய்யாதா என எதிர்பார்த்த நிலையில் வியாழக்கிழமை இரவு அரவக்குறிச்சி மற்றும் அணைப்பாளையத்தில் மழை பெய்தது.
அரவக்குறிச்சியில் 25 மி.மீட்டரும், அணைப்பாளையத்தில் 9 மி.மீட்டர் மழையும் பெய்தது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT