கரூர்

அரவக்குறிச்சி வழியாக காரில் திண்டுக்கல்லுக்கு ரூ.62,400 புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்த முயற்சி: இருவர் கைது, கார் பறிமுதல்

DIN

அரவக்குறிச்சி வழியாக காரில் திண்டுக்கல்லுக்கு ரூ.62,400 மதிப்புள்ள புதுச்சேரி மதுபான பாட்டில்களை கடத்த முயன்ற இருவரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள், கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
 கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சூரிப்பட்டி-மார்க்கம்பட்டி வழியாக திண்டுக்கல்லுக்கு காரில் புதுச்சேரி மதுபானங்களை இருவர் வெள்ளிக்கிழமை கடத்திச் செல்வதாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டிகே.இராஜசேகரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரை மேற்பார்வையில் மாவட்ட மதுவிலக்கு காவல் ஆய்வாளர் சந்தோஷ்குமார் தலைமையில் தனிப்படையினர் சூரிப்பட்டி பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தபோது அதில் ரூ.62,400 மதிப்புள்ள 180 மி.லி. கொள்ளளவு கொண்ட 624 மதுபாட்டில்கள் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து காரை ஓட்டி வந்த திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அம்பிலிக்கை பகுதியைச்சேர்ந்த மனோகரன்(54), அதே பகுதியைச் சேர்ந்த வடிவேல்(42) ஆகியோரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள், கார், இருசக்கரவாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
 இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டிகே.இராஜசேகரன் கூறுகையில், மாவட்டத்தில் நிகழாண்டில் ஏப்ரல் வரை மதுபாட்டில்கள் கடத்தல் தொடர்பாக 8 வழக்குகளில் 7 இருசக்கர வாகனங்கள், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சட்டவிரோதமாக மதுவிற்றதாக 140 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.5.98 லட்சம் மதிப்பிலான புதுச்சேரி பீர் மற்றும் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் காவல்நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் மதுவிற்றதாக 66 பேர் கைது  செய்யப்பட்டு ரூ.1.17 லட்சம் மதிப்பில் மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT