கரூர்

மாட்டுவண்டிகளில் மணல் அள்ள அனுமதி கோரி  காத்திருப்புப் போராட்டம்: 700 தொழிலாளர்கள் கைது

DIN

மாட்டுவண்டிகளில் மணல் அள்ளுவதை நீதிமன்றம் தடை செய்யாத நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவைக் கண்டித்தும்,  மாட்டுவண்டிகளில் மணல் அள்ளுவதை அனுமதிக்கக்கோரியும் கரூர் மாவட்ட ஆட்சியரகம் முன் கரூர் மாவட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் சங்க மாவட்டக் குழு சார்பில் (சிஐடியு ) காத்திருப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் வி. கந்தசாமி தலைமை வகித்தார்.  திருப்பூர் முன்னாள் எம்எல்ஏ கே. தங்கவேல் போராட்டத்தைத் தொடக்கிவைத்து சிறப்புரையாற்றினார்.  
கட்டுமானச் சங்க மாநிலச் செயலர் டி. குமார், சிஐடியு சங்க  மாவட்டத் தலைவர் ஜி. ஜீவானந்தம், மாவட்டச் செயலர் சி. முருகேசன், மாவட்ட நிர்வாகிகள் கந்தசாமி,வேலுச்சாமி,  ராஜா முகம்மது, கரூர்
நகரச் செயலர் ஜோதிபாசு ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்தப் போராட்டத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்ததால் 60 பெண்கள் உட்பட 700 பேரை போலீஸார் கைது செய்து,  மாலையில்
விடுவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: காா் ஓட்டுநா் கைது

ஆம்புலன்ஸ் மோதி பெண் உயிரிழப்பு

கா்ப்பிணிபோல நடித்து பணம் கேட்கும் பெண்கள் -நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

அரசு கல்லூரியில் நோ்முகத் தோ்வு:22 பேருக்கு நியமன ஆணை

ஆபாச காணொலிகளை வெளியிடுவதாக அறிவித்தவரை ஏன் கைது செய்யவில்லை?: எச்.டி.குமாரசாமி

SCROLL FOR NEXT