கரூர்

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி: கரூர் மாவட்டக் கிளை அமைப்பு

DIN

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கரூர் மாவட்டக் கிளை கலைக்கப்பட்டு புதிய குழு ஞாயிற்றுக்கிழமை அமைக்கப்பட்டது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயற்குழு குற்றாலத்தில் கடந்த 2ஆம்தேதி நடைபெற்றது. இதில், கரூர் மாவட்டக் கிளை  கலைக்கப்பட்டது.   இதையடுத்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கரூர் மாவட்ட கிளைக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அதன் அமைப்புக்கூட்டம் மாநிலத் தலைவர் மோசஸ் தலைமையில் கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  இதில் சங்கக் கொடியை முன்னாள் மாவட்டச் செயலாளர் பிச்சுமணி ஏற்றிவைத்தார். இதில் கரூர் பொறுப்பாளர்கள் நீக்கப்பட்டது குறித்து மாநில பொதுச் செயலாளர் செ.பாலச்சந்தர் விளக்கி பேசினார். கூட்டத்தில், மோகனை கன்வீனராகக்கொண்டு காமராஜ், தமிழரசி ஆகிய மூவர் கொண்ட மாவட்ட  அமைப்பு குழு அமைக்கப்பட்டது. கூட்டத்தில் மாநில தலைவர் மோசஸ், பொதுச் செயலாளர் பாலச்சந்தர், பொருளாளர் ஜீவானந்தம் மற்றும் நிர்வாகிகள் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் தமிழக ஆசிரியர்களுக்கும் மத்திய அரசு  ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை 1.1.2006 முதல் கணக்கிட்டு 8 ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.உடனடியாக இடைக்கால நிவாரணமாக 20 சதவீத ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பனஉள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT