கரூர்

மக்கள் குறைதீர்க்கும்  முகாமில் 272 மனுக்கள்

DIN

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, குடிநீர்,  பட்டா மாற்றம், விதவை உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, கல்வி உதவித்தொகை என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம்  272 மனுக்கள் பெறப்பட்டன.  மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அவற்றை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ச. சூர்யபிரகாஷ், மாவட்ட  ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, மக்கள் குறைதீர்க்கும் தனித்துணை ஆட்சியர் ஜான்சிராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT