கரூர்

கொளந்தானூர் பகுதியில் ஆலோசனைக் கூட்டம்

DIN

கொளந்தானூர் பகுதியில் விரைவில் மருத்துவக்கல்லூரி பணிகளைத் தொடங்க வேண்டும் என ஞாயிற்றுக்கிழமை கரூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
 கரூர் ராமானூரில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது ஆலோசனைகளை வழங்கினர். கூட்டத்தில் கரூர் நகரின் மத்தியப் பகுதியான சணப்பிரட்டி கிராமத்தில் பசுபதிபாளையம் கொளந்தானூர் அருகே காந்திகிராமம் பகுதி இருப்பதால் அங்கு பேருந்து வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகள் இருப்பதால் விரைவில் அரசு அறிவித்த இடத்தில் உடனே மருத்துவக் கல்லூரிக்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்க வேண்டும். இனியும் பணிகள் தொடங்க தாமதமானால் பணிகள் தொடங்கும் வரை தொடர் போராட்டம் மற்றும் உண்ணாவிரதம் நடத்துவோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், தாந்தோணிமலை, வெங்கமேடு, சணப்பிரட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுக்குமா ஃபைசாபாத்?

மாற்றத்தைக் கொடுத்த பாரத் ஜோடோ யாத்திரை!

மக்களவைத் தேர்தல் நேரலை: விருதுநகரில் வெல்லப்போவது யார்?

மகாராஷ்டிரம்: நட்சத்திர வேட்பாளர்களின் நிலவரம்!

சம்பல்பூர் தொகுதியில் தர்மேந்திர பிரதான் முன்னிலை!

SCROLL FOR NEXT