கரூர்

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த பெண் சாவு

கரூர் அருகே செவ்வாய்க்கிழமை தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த பெண் உயிரிழந்தார்.

DIN

கரூர் அருகே செவ்வாய்க்கிழமை தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த பெண் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், நொய்யல் அருகேயுள்ள கொங்கு நகரைச் சேர்ந்தவர் சண்முகம் மனைவி சம்பூரணம் (47). இவர் வீட்டு வாசலில் உள்ள தண்ணீர் தொட்டியில் செவ்வாய்க்கிழமை துணி துவைத்துக்கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி தொட்டிக்குள் விழுந்து மூழ்கினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சம்பூரணத்தை பரிசோதித்த மருத்துவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து சண்முகம் அளித்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் வேணுகோபால் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதிவாரி கணக்கெடுப்பு: டிச. 17-ல் அனைத்துக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

சிரஞ்சீவி - நயன்தாராவின் புதிய பட பாடல்!

அனுபமாவின் லாக் டவுன்: புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

கொல்லத்தில் தீ விபத்தில் 10 மீன்பிடி படகுகள் எரிந்து நாசம்

தவெகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் பதில்!

SCROLL FOR NEXT