கரூர்

க.பரமத்தியில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்கப்படுமா?

DIN

க.பரமத்தி பகுதியில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
க.பரமத்தி, கரூர் மாவட்டத்தில் உள்ள எட்டு ஒன்றியத்தில் மிகப்பெரிய ஒன்றியமாகும். இதில் தென்னிலை மேற்கு, கிழக்கு, ஆரியூர், முன்னூர், விஸ்வநாதபுரி, பவித்திரம், நெடுங்கூர், அத்திப்பாளையம், புன்னம், கார்வழி மொஞ்சனூர், நஞ்சைக்காளிகுறிச்சி,புஞ்சைக்காளி குறிச்சி, ராஜபுரம், தொக்குப்பட்டி, அஞ்சூர், தென்னிலை மேற்கு, தெற்கு, கிழக்கு உள்ளிட்ட 30 ஊராட்சிகள் உள்ளன.
இதில் க.பரமத்தி, சின்னதாராபுரம், தென்னிலை, தும்பிவாடி, எலவனூர் பகுதியில் மொத்தம் 5 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. அந்த பள்ளிகளில் பிளஸ் 2 படிப்பை ஆண்டுதோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் முடிக்கின்றனர். அவ்வாறு பிளஸ் 2 படிப்பை முடிக்கும் மாணவ, மாணவிகள் இப்பகுதியில் அரசு பொறியியல் கல்லூரிகள் இல்லாததால் தனியார் பொறியல் கல்லூரிகளில் சேர்ந்து பயிலும் நிலை உள்ளது.
வசதி படைத்த மாணவ, மாணவிகள் தனியார் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் கட்டி பயில்கின்றனர். வசதி இல்லாத ஏழை மாணவிகள் அரசு பொறியியல் கல்லூரி இல்லாததால் படிப்பை தொடர முடியவில்லை. எனவே க.பரமத்தி பகுதியில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை கோரி கிராம மக்கள் மனு

மழை வேண்டி பெரம்பலூரில் சிறப்புத் தொழுகை

கடன் தொல்லை: இளைஞா் தற்கொலை

திருமானூா் அருகே குடிநீா் விநியோகிக்க கோரி சாலை மறியல்

மே 11-இல் பெரம்பலூா் அங்காளம்மன் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT