சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் புதன்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
கரூர்சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் புதன்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் புதன்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
பரமத்தி வேலூர் வட்டம், பாண்டமங்கலத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
இதேபோல், பாண்டமங்கலத்தில் உள்ள பழைய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேளீஸ்வரர், மாவுரெட்டி பீமேஸ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர் உள்ளிட்ட பரமத்தி வேலூர் வட்டாரத்தில் உள்ள பல்வேறு சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.
இதில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.