கரூர் அருகே பெண்ணிடம் ஏழரை பவுன் சங்கிலி பறிப்பு
கரூர் அருகே பெண்ணிடம் ஏழரை பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கரூர் அருகே பெண்ணிடம் ஏழரை பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கரூர் அருகே உள்ள மாரிகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் கரூரில் உள்ள தனியர் கூரியர் நிறுவனத்தில் வாகன ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரீத்தா(24). செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் பிரித்தா தனது மாமியார் லட்சுமி ஆகியோருடன் வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த ரேவதி என்பவர் பிரீத்தா வீட்டுக்கு டிவி பார்க்க வந்தபோது, அந்தப் பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் 2 பேர் அவரது கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றனர்.
அப்போது, அவர் கூச்சலிடவே அருகில் கிடந்த சிறிய மண்வெட்டியால் ரேவதியை தாக்கியுள்ளனர். இதை பார்த்த பிரீத்தா ஓடி வந்து தடுக்க முயன்றபோது அவரது கழுத்தில் கிடந்த ஏழரை பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டனர்.இதுகுறித்த புகாரின்பேரில் வாங்கல் போலீஸார் வழக்குப்பதிந்து, தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.