முகப்பு
கரூர்

கடவூர் ஒன்றியத்தில் சாலைகளை சேதப்படுத்தினால் ரூ.5 ஆயிரம் அபராதம்

கடவூர் ஒன்றிய பகுதிகளில் சாலைகளில் கேஜ்வீல்  பயன்படுத்தி சாலைகளை சேதப்படுத்தினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கடவூர் வட்டார

கரூர்

கடவூர் ஒன்றியத்தில் சாலைகளை சேதப்படுத்தினால் ரூ.5 ஆயிரம் அபராதம்

கடவூர் ஒன்றிய பகுதிகளில் சாலைகளில் கேஜ்வீல்  பயன்படுத்தி சாலைகளை சேதப்படுத்தினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கடவூர் வட்டார

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

கடவூர் ஒன்றிய பகுதிகளில் சாலைகளில் கேஜ்வீல்  பயன்படுத்தி சாலைகளை சேதப்படுத்தினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கடவூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  கடவூர் ஒன்றிய பகுதிகளில் தற்போது ஓரளவு மழை பெய்துள்ளது.
இதனால் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். வயல்களில் நெல் நாற்று நடவு செய்ய உழவுப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வயலில் உழவு செய்வதற்காக விவசாயிகள் டிராக்டரில் கேஜ்வீல் பயன்படுத்துகிறார்கள்.
 இந்த கேஜ்விலுடன் வேறு, வேறு வயல்களுக்கு உழவுப்பணிகளுக்குச் செல்லும் டிராக்டர் ஓட்டுநர் கேஜ்வீலுடன் சாலைகளில் செல்கிறார்கள்.
இந்த வீலுடன் சாலைகளில் செல்லும்போது சாலைகள் சேதமடைந்து வருகின்றன. இதுதொடர்பாக பலமுறை எச்சரிக்கை விடுத்தும் மீண்டும் டிராக்டர் ஓட்டிச் செல்வோர் கேஜ்வீலுடன் சாலைகளில் சென்று சாலைகளை பழுதாக்கி வருகிறார்கள். எனவே இனியும் கேஜ்வீலுடன் சாலைகளில் சென்றால், டிராக்டரை இயக்கிச்செல்லும் வாகன ஓட்டிக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →