கூட்டு பண்ணைத் திட்ட செயலாக்கம் : 160 விவசாய ஆர்வலர்கள் குழு அமைப்பு
கரூர் மாவட்டத்தில் கூட்டுப் பண்ணைத் திட்டத்தை செயல்படுத்திட 160 விவசாய ஆர்வலர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.
கரூர்கூட்டு பண்ணைத் திட்ட செயலாக்கம் : 160 விவசாய ஆர்வலர்கள் குழு அமைப்பு
கரூர் மாவட்டத்தில் கூட்டுப் பண்ணைத் திட்டத்தை செயல்படுத்திட 160 விவசாய ஆர்வலர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் கூட்டுப் பண்ணைத் திட்டத்தை செயல்படுத்திட 160 விவசாய ஆர்வலர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் கரூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சங்கரம்பாளையம், தண்ணீர்பந்தல்பாளையம், வாங்கல் குப்புச்சிபாளையம், புஞ்சைகடம்பங்குறிச்சி போன்ற பகுதிகளில் வேளாண் துறை சார்ந்த பணிகள் நடைபெற்று வருவதை ஆட்சியர் கு.கோவிந்தராஜ் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், கரூர் மாவட்டத்தில் சிறுகுறு விவசாயிகளை ஒருங்கிணத்து விவசாயிகள் உற்பத்தி பொருட்கள் தொடங்கி கூட்டு பண்ணைத் திட்டத்தை செயல்படுத்திட 160 விவசாய ஆர்வலர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் வேளாண்துறை மூலம் 120 குழுக்களும், தோட்டக்கலைத்துறை மூலம் 40 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டுப்பண்ணைத் திட்டத்தில் 20 பேர் கொண்ட 5 விவசாயிகள் ஆர்வலர்கள் குழு ஒருங்கிணைக்கப்பட்டு 100 சிறு, குறு விவசாயிகளை கொண்ட விவசாயிகள் உற்பத்திக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்களுக்கு கலப்பு பண்ணையம் மற்றும் மதிப்பு கூட்டிய வேளாண் பொருட்களை உற்பத்தி செய்து விவசாயிகள் தாங்களாகவே தொழில்முனைவோராக செயல்பட உரிய வழிவகை செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 100 விவசாயிகளைக் கொண்ட உற்பத்திக்குழுவும் பதிவுத்துறையில் பதிவு செய்தபின் சுழல்நிதியாக ரூ.5 லட்சத்தை 3 கட்டங்களாக பிரித்து வழங்கப்படுவதுடன், நபார்டு வங்கி மற்றும் சிறு விவசாயிகள் வேளாண் வணிக கூட்டமைப்பு மூலம் கடன்வசதி செய்து தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் விதைப்பண்ணை அமைத்து தரமான சான்று விதைகள் உற்பத்தி செய்ய சிறுதானிய பயிரில் 2 ஹெக்டேர், பயறு வகையில் 5 ஹெக்டேர், எண்ணெய்வித்து பயிரில் 45 ஹெக்டேர் இலக்கீடு பெறப்பட்டு தற்போது சிறுதானிய பயிரில் 2 ஹெக்டேர், பயறு வகையில் 93.92 ஹெக்டேர், எண்ணெய்வித்து பயிரில் 40.64 ஹெக்டேர் விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. வேளாண்துறையில் அட்மா திட்டம் மூலம் சூரியவிளக்கு பொறி மானிய விலையில் வட்டாரத்திற்கு ஒன்று வீதம் 8 சூரிய விளக்குப்பொறிகள் செயல்விளக்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விளக்கு மூலம் பயிரின் ஆரம்ப நிலையில் பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணித்து நன்மை செய்யும் மற்றும் தீமை செய்யும் பூச்சி இனங்களை பிரித்தறிய உதவும் என்றார்.
தொடர்ந்து வாங்கல் குப்புச்சிபாளையத்தில் கூட்டுப்பண்ணையத்திட்டத்தில் உறுப்பினராக உள்ள விவசாயிகளின் மகசூல் தொடர்பான செயல்பாடுகளையும், புஞ்சைகடம்பங்குறிச்சியில் இயற்கை மண் புழு உரம் தயாரிக்கும் கூடத்தையும் ஆட்சியர் பார்வையிட்டார்.
ஆய்வின்போது வேளாண் இணை இயக்குநர் பாஸ்கரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.