கரூர்

லயன்ஸ் சங்கக் கூட்டம்

DIN

கரூர் மாவட்டம், குளித்தலையில் லயன்ஸ் சங்கத்தில் புதிதாக இணைந்த 10 உறுப்பினர்களுக்கும், கிருஷ்ணராயபுரத்தில் குளித்தலை லயன்ஸ் சங்கத்தால் தொடங்கப்பட உள்ள புதிய சங்கத்தில் சாசன உறுப்பினர்களாக இணையும் 30 உறுப்பினர்களுக்குமான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கத் தலைவர் மேலை. பழநியப்பன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசுகையில், ஐநா அங்கீகாரம் பெற்று லயன்ஸ் சங்கங்கள் செயல்படுகின்றன. இந்த இயக்கம் பிறருக்கு உதவும் மனப்பாங்குடன் தோற்றுவிக்கப்பட்ட மாபெரும் இயக்கம். எல்லோரும் தலைமையை ஏற்கும் வகையில் தலைமைப் பண்பை கற்றுத்தரும் ஒரே இயக்கம் லயன்ஸ் சங்கம் என்றார்.
கூட்டத்திற்கு குளித்தலை லயன்ஸ் சங்கத் தலைவர் கே.பி. அருண்மொழி தலைமை வகித்தார். செயலாளர் மனோஜ் முன்னிலை வகித்தார். மண்டலத் தலைவர் ஆர். கணேசன் வரவேற்றார். ஆர். தண்டபாணி அறிமுக உரையாற்றினார். இதில், கே. சங்கர், பன்னீர்செல்வம் உள்ளிட்ட குளித்தலை சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT