கரூர்

பள்ளபட்டி வாரச்சந்தையில் பூட்டியே கிடக்கும் கழிப்பறை: பொதுமக்கள் அவதி

DIN

பள்ளபட்டி வாரச்சந்தையில் பேரூராட்சி நிர்வாகம் மூலம் ரூ. 3.80 லட்சத்தில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் சுமார் 10 ஆண்டுகளாக பூட்டியே கிடப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
பள்ளபட்டி பேருந்து நிலையம் அருகே திங்கட்கிழமை காலை முதல் மாலையில் செயல்படும் வாரச்சந்தைக்கு பள்ளபட்டி மட்டுமின்றி சுற்றுப்புறப் பகுதி மக்களும் வந்து காய்கனிகள்,மளிகைப் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
இந்த சந்தையில் உள்ள சுகாதார வளாகம் 10 ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாததால் இங்கு வரும் பொதுமக்கள், கடைக்காரர்கள்,பேருந்து பயணிகள் ஆகியோர் இதைப் பயன்படுத்த முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இதற்கு பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT