முகப்பு
கரூர்

கரூரில் தனியார் நிறுவனத்துக்குள் புகுந்த கார்

கரூரில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், குடிநீர் விநியோகம் செய்யும் நிறுவனத்திற்குள் புகுந்ததில், அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிருடன் மீட்கப்பட்டார். 

Updated On : 9 ஏப்ரல், 2018 at 8:24 AM
பகிர்:

கரூரில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், குடிநீர் விநியோகம் செய்யும் நிறுவனத்திற்குள் புகுந்ததில், அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிருடன் மீட்கப்பட்டார். 
கரூரில் ஈரோடு சாலையில் உள்ள காயத்திரி நகரைச் சேர்ந்தவர் தனசேகர்(50). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது காரில் கரூர் சென்றுவிட்டு வீடு திரும்பும்வழியில்  திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், காயத்திரி நகர் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தின் சுற்றுச் சுவரை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தது. 
இதில், பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். கரூர் நகர காவல்நிலையத்தினர் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.