"தன்னம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால் இலக்கை எளிதில் அடையலாம்'
தன்னம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால் வாழ்வின் இலக்கை எளிதில் அடையலாம் என்றார் முன்னாள் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் எம்.பொன்னவைக்கோ.
தன்னம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால் வாழ்வின் இலக்கை எளிதில் அடையலாம் என்றார் முன்னாள் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் எம்.பொன்னவைக்கோ.
கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் அன்னை மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 8 ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவிகளுக்கு பட்டங்களையும், பல்கலைக்கழக தரவரிசை பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயமும் வழங்கி மேலும் அவர் பேசியது:
வாழ்வியல் நெறிமுறைகளைத் தருவது திருக்குறள். திருக்குறள் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடியது. திருக்குறளை பின்பற்றினால் வாழ்வில் மேன்மை அடையலாம். தன்னம்பிக்கை, விடா முயற்சி இருந்தால் வாழ்வின் இலக்கை எளிதில் அடையலாம். ஒவ்வொருவருக்கும் தனித்திறமை உண்டு. அத்தகைய திறமைகளை வெளிக்கொணர்வதன் மூலம் சமுதாயத்தில் நம்மைத் தேடி புகழ் வரும் என்றார்.
முன்னதாக கல்லூரி முதல்வர் சாருமதி வரவேற்றார். அன்னை ஸ்ரீ அரபிந்தோ கல்வி அறக்கட்டளை நிறுவனர் ஏ.ஆர்.மலையப்பசாமி தலைமை வகித்தார். அறக்கட்டளை தலைவர் எஸ்.ராமமூர்த்தி, பொருளாளர் என்.கந்தசாமி, செயல் அறங்காவலர் தங்கராசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவிகள் உள்ளிட்டோர் திரளாகப் பங்கேற்றனர். வணிக மேலாண்மை துறைத்தலைவர் வினோதா நன்றி கூறினார்.