மாவட்ட ஓவியப் போட்டி: பாரதி பள்ளி சிறப்பிடம்
மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் வெள்ளியணை பாரதி பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பிடித்தனர்.
மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் வெள்ளியணை பாரதி பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பிடித்தனர்.
வெள்ளியணை பாரதி பள்ளியில் நீர்வள நதி மேம்பாடு என்ற தலைப்பில் மாவட்ட அளவில் ஓவியப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. இதில், பள்ளியின் 8 ஆம் வகுப்பு மாணவர் ராகுல் முதலிடத்தையும், 7 ஆம் வகுப்பு மாணவர் பூபேஸ்வரன் 2 ஆம் இடத்தையும், 6 ஆம் வகுப்பு மாணவி மோனிஷா 3 ஆம் இடத்தையும் பிடித்தார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது.
இதில், பள்ளியின் தலைவர் நாகல்சாமி, கல்விக்குழு ஆலோசகர் ஞானபாரதி, பேராசிரியர் பாண்டியராஜன், முதல்வர் சந்திரசேகரன், துணை முதல்வர் பிராபகர், நிர்வாக அலுவலர் பாலசுப்ரமணியன் மற்றும் ஓவிய ஆசிரியர் வெங்கடேசன் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.