கணவர் குத்திக் கொலை: மனைவி கைது
கரூர் வாங்கப்பாளையம் காந்தி நகரைச் சேர்ந்தவர் ராமு (34). கட்டடத்தொழிலாளி
கரூர்கணவர் குத்திக் கொலை: மனைவி கைது
கரூர் வாங்கப்பாளையம் காந்தி நகரைச் சேர்ந்தவர் ராமு (34). கட்டடத்தொழிலாளி
கரூர் வாங்கப்பாளையம் காந்தி நகரைச் சேர்ந்தவர் ராமு (34). கட்டடத்தொழிலாளி. இவருக்கு மனைவி தனலட்சுமி(28), மகள்கள் பூமிகாஷ் (6), ஹரிவர்ஷா (2) ஆகியோர் உள்ளனர். ராமுவும், தனலட்சுமியும் கடந்த 8 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்களாம்.
மது போதைக்கு அடிமையான ராமு அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வாராம். ஞாயிற்றுக்கிழமை மாலை போதையில் வந்த அவர், மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதில், ஆத்திரமடைந்த ராமு மனைவியை கீழே தள்ளி கழுத்தை நெரித்துள்ளார். அப்போது அருகில் கிடந்த கத்தரிக்கோலால் ராமுவின் நெஞ்சில் தனலட்சுமி குத்தியுள்ளார். இதில் மயங்கிய ராமுவை உடனே மீட்டு கரூர் அரசு மருத்துவமனையில் தனலட்சுமி சேர்த்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வெங்கமேடு போலீஸார் வழக்குப் பதிந்து தனலட்சுமியைக் கைது செய்தனர்.