முகப்பு
கரூர்

அதிமுக உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கல்

கரூரில்  அதிமுக நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகளிடம் உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் வழங்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கரூர்

அதிமுக உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கல்

கரூரில்  அதிமுக நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகளிடம் உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் வழங்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

ரூரில்  அதிமுக நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகளிடம் உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் வழங்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அமைச்சர் எம்ஆர். விஜயபாஸ்கர் விண்ணப்பங்களை வழங்கினார்.
கரூர் மாவட்ட அதிமுக சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்தும் வகையில்  அனைத்து ஒன்றியம், நகரம், பேரூர் மற்றும் கிளைகளிலும் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியினர் கிராமம் மற்றும் நகரம், வார்டு வாரியங்களாக மக்களை நேரடியாகச் சந்தித்து உறுப்பினர் சேர்க்கை நடத்துவர். இந்த கமிட்டியினருக்கு உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  
நிகழ்ச்சியில் மாவட்ட அதிமுக செயலரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகளிடம் விண்ணப்பங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் ஏ.ஆர். காளியப்பன்,  முன்னாள் கரூர் ஒன்றியக்குழுத் தலைவர் எஸ். திருவிகா, நகரச் செயலர் வை. நெடுஞ்செழியன், பேரவைச் செயலர் செ. காமராஜ், ஒன்றியச் செயலர்கள் கமலக்கண்ணன், மார்க்கண்டேயன், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலர் எம். செல்வராஜ்,  நகர பேரவைச் செயலர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் தேமுதிக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர்  அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →