டேக்வாண்டோ: பரணிபார்க் பள்ளிக்கு 2 தங்கப் பதக்கம்
தென்னிந்திய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் கரூர் பரணிபார்க் பள்ளிக்கு இரு தங்கப்பதக்கம் கிடைத்தது.
தென்னிந்திய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் கரூர் பரணிபார்க் பள்ளிக்கு இரு தங்கப்பதக்கம் கிடைத்தது.
அண்மையில் திருச்சி ஜமால்முகம்மது கல்லூரியில் நடைபெற்ற தென் இந்திய அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி இந்துஸ்தான் ஸ்போர்ட்ஸ் டேக்வாண்டோ அகாதெமி சார்பில் நடைபெற்றது.
இதில் தமிழக அணி சார்பாக கலந்து கொண்ட பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி சகானா 35 கிலோ எடைப் பிரிவில் தங்கம் பெற்றார். இதேபோல மாணவர் ஹரிஷ்த் 18 கிலோ எடைப் பிரிவில் தங்கம் பெற்றார். இருவரும் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்று தமிழகத்திற்கும், பரணி பார்க் பள்ளிக்கும் பெருமை சேர்த்தனர்.
இவர்களுக்கு பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பள்ளி தாளாளர் எஸ். மோகனரெங்கன் ,செயலர் பத்மாவதி மோகனரெங்கன் ,பள்ளியின் முதன்மை முதல்வர் முனைவர் சொ. ராமசுப்ரமணியன், முதல்வர் சேகர் மற்றும் இருபால் ஆசிரியர்கள் பாராட்டினர்.