முகப்பு
கரூர்

சங்க காலப் புலவர்கள் நினைவுத்தூணுக்கு மாலை

உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு கரூரில் சங்க கால புலவர்கள் நினைவுத்தூணுக்கு தமிழறிஞர்கள் மாலை அணிவித்து உறுதிமொழியேற்றனர்.

கரூர்

சங்க காலப் புலவர்கள் நினைவுத்தூணுக்கு மாலை

உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு கரூரில் சங்க கால புலவர்கள் நினைவுத்தூணுக்கு தமிழறிஞர்கள் மாலை அணிவித்து உறுதிமொழியேற்றனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு கரூரில் சங்க கால புலவர்கள் நினைவுத்தூணுக்கு தமிழறிஞர்கள் மாலை அணிவித்து உறுதிமொழியேற்றனர்.
 உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு கரூரில் கருவூர் திருக்குறள் பேரவை நிறுவனர் மேலை. பழநியப்பன் தலைமையில் கரூர் வட்டாட்சியரகம் முன் உள்ள சங்க காலப் புலவர்கள் நினைவுத்தூணுக்கு தமிழறிஞர்கள் புதன்கிழமை மாலை அணிவித்தனர். பின்னர் அனைவரும், தமிழிலே பேசுவோம், குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயரைச் சூட்டுவோம், உறவினரை தமிழில் அழைப்போம், ஒவ்வொருவரும் திருக்குறளை படித்து அதை வாழ்வியல் நெறியாக்கி வாழ்வோம் என உறுதியேற்றனர்.
நிகழ்ச்சியில் தமிழறிஞரும் ஓய்வுபெற்ற ஆசிரியருமான காமராஜ், சதாசிவம், இயற்கை பாதுகாப்பு மைய தமிழ்ச்சேரன், நூலகர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →