கரூர்

பாரம்பரியத்தை கொண்டு செல்வது நம் கடமை

DIN

எதிர்காலச் சந்ததியினருக்கு பாரம்பரியத்தை கொண்டு செல்வது நம் ஒவ்வொருவரின் கடமை என்றார் மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ்.
கரூர் மாவட்டம் மாயனூர் அம்மா பூங்காவில் சுற்றுலாத் துறை மூலம் நடைபெற்ற பொங்கல் விழாவைத் தொடக்கிவைத்து மேலும் அவர் பேசுகையில், தமிழர்களின் ஒட்டுமொத்த விழாக்களில் உச்சமாகத் திகழும் பொங்கல் விழாவை சுற்றுலாத் துறை மூலம் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாட அரசு ஆணையிட்டுள்ளது. நம் எதிர்காலச் சந்ததியினருக்கு நமது பாரம்பரியங்களையும், கலை, கலாசாரத்தையும் கொண்டுசெல்வது நம் ஒவ்வொருவரின் கடமை. அப்படியே பழைமை மாறாமல் கொண்டு செல்லவே இதுபோன்ற விழாக்கள் கொண்டாடப்படுகின்றன என்றார்.
நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ எம். கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் ச. சூர்யபிரகாஷ், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எஸ். கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சைபுதீன், உதவி சுற்றுலா அலுவலர் காமிலாஅன்சர், வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT