கார் மோதி முதியவர் சாவு
கார் மோதி சாலையில் நின்றிருந்த முதியவர் இறந்தார்.கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த மீனாட்சிவலசு பகுதியைச் சேர்ந்தவர் நல்லசாமி (68). இவர், ஞாயிற்றுக்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் கரூர் -
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM
கார் மோதி சாலையில் நின்றிருந்த முதியவர் இறந்தார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த மீனாட்சிவலசு பகுதியைச் சேர்ந்தவர் நல்லசாமி (68). இவர், ஞாயிற்றுக்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் கரூர் - கோவை சாலையில் தென்னிலையில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு நின்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியே வந்த கார் அவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார்.
உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
ஆனால் வழிலேயே அவர் இறந்தார். இதுகுறித்து தென்னிலை போலீஸார் வழக்கு பதிந்து கார் ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.