கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
கரூர் மாவட்ட விளையாட்டரங்கில் கடந்த மாதம் 30 ஆம் தேதி தொடங்கிய கோடை கால விளையாட்டுப் பயிற்சி திங்கள்கிழமை
கரூர் மாவட்ட விளையாட்டரங்கில் கடந்த மாதம் 30 ஆம் தேதி தொடங்கிய கோடை கால விளையாட்டுப் பயிற்சி திங்கள்கிழமை நிறைவடைந்தது. இதையடுத்து, பயிற்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் த. அன்பழகன் சான்றிதழ்கள் வழங்கினார்.
சர்வதேச அளவில் உலக திறனாய்வாளர்களைக் கண்டறியும் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த கோடை கால விளையாட்டு முகாமில், கால்பந்து பயிற்சியாளர் கோபி, கூடைப்பந்து பயிற்சியாளர் பாலசந்தர், தடகள பயிற்சியாளர் ஆம்ஸ்ட்ராங், வளைகோல் பந்து பயிற்சியாளர் வீரப்பன் ஆகியோர் பங்கேற்ற 60 மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
இந்நிலையில் பயிற்சி முகாம் திங்கள்கிழமை நிறைவடைந்தது. இதில், கோடை கால விளையாட்டு பயிற்சியை நிறைவு செய்த மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் த. அன்பழகன் சான்றிதழ் மற்றும் சீருடைகள் வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.