ராஜீவ்காந்தி படத்துக்கு மரியாதை : காங்கிரஸார் ரத்த தானம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, கரூரில் செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியினர் அவரது படத்திற்கு மா
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, கரூரில் செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியினர் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், ரத்த தானம் செய்தனர்.
கரூர் பேருந்துநிலைய ரவுண்டானா காமராஜர் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி படத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், முன்னாள் மாவட்டத் தலைவருமான பேங்க் கே. சுப்ரமணியன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் கரூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற ரத்த தான முகாமை முன்னாள் மாவட்டத் தலைவர் ரத்த தானம் வழங்கி முகாமை துவக்கி வைத்தார். தொடர்ந்து தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரி முன்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் ராஜிவ் காந்தி படத்திற்கு மாலை அணிவித்து, பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் என்எஸ்.பிரேம்குமார், மாநில விவசாய அணிச் செயலாளர் பி.ஜெயபிரகாஷ், காங்.சேவாதள தலைவர் டி.சுப்ரமணி, வர்த்தக காங். தலைவர் சதீஷ்குமார், இளைஞர் காங்.பொதுச் செயலாளர் நவீன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், முன்னாள் எம்எல்ஏ வெள்ளியணை ராமநாதன், மாவட்ட துணைத் தலைவர் எம்.சின்னையன், முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் என். நாட்ராயன், கரூர் வட்டாரத்தலைவர் ஆடிட்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.