கரூர்

ஒப்பந்தச் செவிலியர்களுக்கு காலமுறை ஊதியம் தேவை

DIN

ஒப்பந்த (எம்ஆர்பி) செவிலியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என கரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டுச் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மாவட்டத் தலைவர் கவிதா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் நித்யா, மீனா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாநில இணைச் செயலர் ஜான்பிரிட்டோ, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் மு. சுப்ரமணியன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கினர். கூட்டத்தில் ஒப்பந்த (எம்ஆர்பி) செவிலியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். மாற்றுப்பணிகளை ரத்து செய்ய வேண்டும். மாறுதல் கலந்தாய்வில் பணிமாறுதல் பெற்ற செவிலியர்களுக்கு பணி மாறுதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் செவிலியர்கள் பூங்கோதை, டெய்சி, பிரவீனா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தலைமைக்கு ரேபரேலி மீண்டும் தயார்: பிரியங்கா

யார் இந்த பிரபலம்?

உச்ச நீதிமன்றத்தில் அன்று பதஞ்சலி, இன்று மருத்துவக் கழகம்

பிறந்து 4 நாள்களேயான சிசுவின் உடல் கால்வாயில் மீட்பு!

அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போா் 53.74 லட்சம்!

SCROLL FOR NEXT