கரூர்

3 புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கம்

DIN


பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் 3 புதிய வழித்தடங்களில் பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார்.
முன்னதாக கரூர் மாவட்டம் க. பரமத்தி ஒன்றியம் பழமாபுரம் பகுதியில் புதிய வழித்தடத்தில் மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் தலைமையில் புதிய வழித்தடத்தில் பேருந்தை ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியது:
தமிழக அரசு பொதுமக்களின் கோரிக்கைகள் மீது மிகுந்த கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கிறது. கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்களை நேரில் சந்தித்து பெற்ற கோரிக்கை மனுக்கள் மூலம் பெற்ற கோரிக்கைகளை ஏற்று பரமத்தி வடக்கு ஒன்றியம், பழமாபுரம் பகுதியில், கரூர்-பழமாபுரம் (வழி) மண்மங்கலம், வேலாயுதம்பாளையம், டி.என்.பி.எல், மூலிமங்கலம் வழித்தடம், பரமத்தி தெற்கு ஒன்றியம், எம்.ஜி.ஆர்.நகர், சின்னதாராபுரம் பகுதியில், பள்ளபட்டி-பரமத்திவேலூர் (வழி), அரவக்குறிச்சி, அரிக்கதாரன்வலசு, ஒத்தமாந்துறை, சின்னதாராபுரம், ஆரியூர், பரமத்தி வழித்தடம், அரவக்குறிச்சி ஒன்றியம், கே.வெங்கிடாபுரம் பகுதியில், பள்ளபட்டி-மார்க்கம்பட்டி (வழி) தலையாரிப்பட்டி, இனுங்கனூர், குமாரபாளையம், கே.வெங்கிடாபுரம், நவாமரத்துப்பட்டி வழித்தடம் ஆகிய 3 புதிய வழித்தடங்கள் பொதுமக்கள் பயன்படும் வகையிலும், பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையிலும் காலை, மாலைகளில் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டம் முழுவதும் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களில் அவசியம், அத்தியாவசியத் தேவைகளுக்காக பேருந்து வசதி கோரும் கிராமங்களுக்கு படிப்படியாக புதிய வழித்தடங்களை அமைத்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கரூர் பொது மேலாளர் எஸ்.எஸ். ராஜ்மோகன், மண்டல மேலாளர் ஜுலியஸ் அற்புதராயன், அரவக்குறிச்சி வட்டாட்சியர் பிரபு , கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகள் ஏ.ஆர். காளியப்பன், எஸ். திருவிகா, பி. மார்க்கண்டேயன், கமலக்கண்ணன், கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

SCROLL FOR NEXT