கரூர்

தேசிய கையுந்துப் பந்து போட்டிக்கு மலர் மெட்ரிக் மாணவர்கள் தேர்வு

DIN

தேசிய கையுந்துப் பந்து போட்டிக்கு கரூர் தாந்தோணிமலை மலர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளி கல்வித் துறை சார்பில் அண்மையில் கரூரில் மாநில அளவிலான தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில் கரூர் தாந்தோணிமலை மலர் மெட்ரிக் பள்ளியின் பிளஸ்-2 மாணவர் வி. கோவிந்தராஜ் கையுந்துபந்து போட்டியில் வென்று தேசிய போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் மாணவர்கள் விசால், பாரதி ஆகியோரும் வென்று மாநில போட்டிக்கு தேர்வு பெற்றனர். 
இவர்களுக்கு செவ்வாய்க்கிழமை பள்ளி பள்ளி முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பள்ளித் தாளாளர் பேங்க் கே. சுப்ரமணியன் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.  
பள்ளி துணை முதல்வர் ஜெயசித்ரா, உடற்கல்வி ஆசிரியர்கள் இளவழகன், பானுப்பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT