கரூர்

கூட்டணிக்காக நாங்கள் யார் கதவையும் தட்டவில்லை

DIN

கூட்டணிக்காக நாங்கள் யார் கதவையும் தட்டவில்லை என்றார் மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை.
கரூர் மாவட்டம் வெஞ்சமாங்கூடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் பங்கேற்ற அவர் முன்னதாக செய்தியாளர்களிடம் மேலும் கூறியது: கடந்த ஆறு மாதங்களாக மத்திய அரசுடன் போராடியதால்தான் உள்ளாட்சித் துறைக்கான நிதி ரூ.390 கோடி கிடைத்துள்ளது.  65 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் தற்போது 85 ரூபாய்க்கு விற்பதற்கு பெட்ரோலுக்கு மத்திய அரசு விதிக்கும் கலால் வரி தான் காரணம். எனவே, மத்திய அரசு தான் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியும்.  எப்போதும் ஜிஎஸ்டியை எதிர்க்கும் அரசாகத்தான் தமிழக அரசு உள்ளது. கூட்டணிக்காக நாங்கள் யார் கதவையும் தட்டவில்லை. அமித் ஷா தான் அரசியல் கதவைத் தட்டி வருகிறார். ஜெயலலிதா கூறியது போல தனித்து எங்களால் வெற்றிபெற முடியும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT