கரூர்

கோயில் வளாகத்தில் தூய்மை பணி செய்த அரசுக் கல்லூரி மாணவர்கள்

DIN

கரூரில் அரசுக் கல்லூரி மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமை தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் வளாகத்தில் தூய்மைப் பணி மேற்கொண்டனர். முன்னதாக தூய்மை விழிப்புணர்வு பேரணியில் திரளாகப் பங்கேற்றனர். 
சுற்றுலா துறையின் சார்பில் தூய்மை பாரத இயக்கம் கடைப்பிடிப்பதையொட்டி கரூர் தாந்தோணிமலை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தொடங்கிய இந்த விழிப்புணர்வுப் பேரணியை ஆட்சியர் த. அன்பழகன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். 
பேரணி தாந்தோன்றிமலை கல்லூரியில் இருந்து தொடங்கி திண்டுக்கல் சாலை வழியாகச் சென்று கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலை அடைந்தது. தொடர்ந்து கோயில் வளாகத்தை மாணவ, மாணவிகள் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக பேரணியில்  பங்கேற்ற 100-க்கும் மேற்பட்ட அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் "நமது இந்திய திருநாட்டை சுத்தமாகவும், சுதந்திரமாகவும் வைத்திருப்பது நமது கடமையாகும்' என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திவாறும்,  முழக்கமிட்டவாறும் சென்றனர்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் கூறுகையில், மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் சார்பில் இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் தரவரிசைப்படுத்தப்பட உள்ளது.  
இதற்கென தனிப்பட்ட கணக்கெடுப்பு நிறுவனம் மூலம்  ஊரகப் பகுதிகளில் தூய்மை கணக்கெடுப்பு (ஊரகம்) 2018 பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. 
இந்தத் தூய்மை கணக்கெடுப்பானது பொது இடங்களில் தூய்மை குறித்த கணக்கெடுப்பு, பொதுமக்களின் கருத்தறிதல் மற்றும் தூய்மை பாரத திட்ட செயலாக்கம் ஆகியவற்றின் பரிந்துரைகள் அடிப்படையில் விரிவான மதிப்பீடு செய்யப்படும் என்றார். 
நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் செந்தில்முருகன், வருவாய் கோட்டாட்சியர் கு.சரவணமூர்த்தி, அரசு கல்லூரி முதல்வர் ஜோதிவெங்கடேஸ்ரவன், சுற்றுலா துறை அலுவலர் சிவக்குமார், வட்டாட்சியர் ஈஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருப்பு

சா்வதேச ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற சிவகங்கை வீரா்களுக்குப் பாராட்டு

கல்லல் ஊராட்சியில் நீா் மோா் பந்தல் திறப்பு

ஆம்பூரில் ரூ. 10 லட்சத்தில் மின்மாற்றி அமைப்பு

குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

SCROLL FOR NEXT