கரூர்

ஊராட்சிகளில் நாளை கிராமசபைக்கூட்டம்

DIN

ஆக.15-ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது.      
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் கூறியது: 
கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், ஊராட்சிப் பகுதிகளில்  நடைபெறும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம்,  பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், உணவு பொருள் வழங்குதல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, முழு சுகாதார தமிழகம்  முன்னோடி தமிழகம், திறந்தவெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகள், குழுக்களுக்கு ஒத்துழைப்பு, திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைத்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.    
எனவே  சம்பந்தப்பட்ட  ஊராட்சி பொதுமக்கள்  அனைவரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT