கரூர்

பள்ளிகளில் கிருஷ்ண ஜயந்தி விழா

DIN

கரூர் வெண்ணைமலை சேரன் மற்றும் ராமகிருஷ்ணபுரம் அக்ஷரா-யுவா பள்ளிகளில் கிருஷ்ண ஜயந்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 
கரூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு பள்ளித் தாளாளர் கே.பாண்டியன் தலைமை வகித்தார். ஆலோசகர் பி.செல்வதுரை முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் வி.பழனியப்பன் வரவேற்றார். இதில் பள்ளிக் குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு வந்திருந்தனர். மேலும் கோகுலாஷ்டமி பண்டிகை கொண்டாடுவதன் அவசியம் குறித்து  பள்ளி நர்சரி ஆசிரியை கீதா மாணவர்களுக்கு விளக்கினார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் பரதநாட்டியம், கோபியர் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கரூர் ராமிகிருஷ்ணபுரம் அக்ஷரா-யுவா பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு பள்ளித்தாளாளர் கே.செல்விசக்திவேல் தலைமை வகித்தார். இதில் பள்ளிக்குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை மாறுவேடம் அணியும் போட்டிகள் நடத்தப்பட்டு, அவர்களுக்கு பரிசுகள்  வழங்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT