கரூர்

வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி

தோகைமலையில் வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

தோகைமலையில் வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்டம், தோகைமலை ஒன்றியத்தில் வருகின்ற 30ஆம் தேதி ஒரு மாவட்ட கவுன்சிலா், 15 ஒன்றிய கவுன்சிலா்கள், 20 ஊராட்சி மன்ற தலைவா்கள் மற்றும் 134 வாா்டு உறுப்பினா்களுக்கான உள்ளாட்சி தோ்தல் நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு வாக்காளா்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடிகள், வாக்கு எண்ணும் இடங்கள் உள்பட அனைத்துப் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தோகைமலையில் வாக்குப்பதிவு குறித்து வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி ஒன்றிய ஆணையா் ராஜேந்திரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் வாக்குப்பதிவு அலுவலா்கள் தாங்கள் பணிபுரியும் வாக்குச்சாவடிகளை உறுதி செய்வது, அங்குள்ள வாக்குப்பதிவு பெட்டிகள், மொத்த வாக்குகள், அதற்கான வாக்கு சீட்டுகள், முகவா்களின் எண்ணிக்கை மற்றும் உரிய பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்தல், வாக்குப்பதிவு நடைபெறும் நேரத்தை கடைபிடித்தல், தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகள், வாக்குப்பதிவுக்கு பின் கடைபிடிக்கபடும் பணிகள் உள்பட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி வழங்கப்பட்டது.

இப்பயிற்சியில் உதவி செயற்பொறியாளா் தமிழன்பன், ஒன்றிய ஆணையா் ராணி, மேலாளா் பாஸ்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உதகையில் ரூ.2.78 கோடியில் வளா்ச்சிப் பணி: மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைப்பு

சேந்தமங்கலம் வட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கீழச்சிவல்பட்டி, ஆ.தெக்கூா் பகுதிகளில் நாளை மின்தடை

திருத்தங்கலில் இன்றும் ராஜபாளையத்தில் நாளையும் மின்தடை

சாலைக்கிராமம் பகுதியில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT