கரூர்

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இளைஞர் தீக்குளிக்க முயற்சி

DIN

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. 
கரூர் பெரியகோதூர் எல்என்எஸ் போஸ்ட் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன்(45). தனியார் டிராவல்ஸ் வாகன ஓட்டுநர். இவர் தற்போது குடியிருக்கும் இடத்தை அதே பகுதியைச் சேர்ந்த ருக்குமணி, ரமேஷ், பாரதி ஆகியோர் தங்களது இடம் எனவும், உடனே இடத்தை விட்டு காலி செய்யாவிட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. 
இதுகுறித்து நடராஜன் போலீஸில் புகார் அளித்தும் நடவடிக்கை ஏதும் இல்லையாம். இதனால் விரக்தியடைந்த நடராஜன் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு தனது பைக்கில் கையில் பெட்ரோல் கேனுடன் வந்தார். நுழைவு வாயிலில் இருந்த போலீஸார் அவரைத் தடுத்தும் மீறி உள்ளே நுழைந்த அவரை அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மடக்கிப் பிடித்தனர். இதையடுத்து, தனது உடலில் பெட்ரோலை ஊற்றமுயன்ற அவரிடமிருந்து பெட்ரோல் பாட்டிலைப் பாலீஸார் பறித்தனர். 
பின்னர் அவரை ஆட்சியரிடம் போலீஸார் அழைத்துச் சென்றனர். ஆட்சியர் இதுதொடர்பாக போலீஸாரிடம் அழைத்துச் செல்லுமாறு கூறியதையடுத்து, அவரைப் போலீஸார் தாந்தோணிமலை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். 
தொடர்ந்து மூன்றாவது வாரமாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயலும் சம்பவம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT