கரூர்

குளங்கள், ஏரிகளை தூர்வார  ரூ.6.87 கோடி நிதி ஒதுக்கீடு

கரூர் மாவட்டத்தில் உள்ள 33 குளங்கள், ஏரிகளை குடிமராமத்து திட்டத்தின் மூலம் தூர்வார ரூ.6.87 கோடி நிதி

DIN

கரூர் மாவட்டத்தில் உள்ள 33 குளங்கள், ஏரிகளை குடிமராமத்து திட்டத்தின் மூலம் தூர்வார ரூ.6.87 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
நிகழாண்டில், கரூர் மாவட்டத்தில் உள்ள 33 குளங்கள், ஏரிகளை குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வார ரூ.6, 87, 50,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமராவதி வடிநில கோட்டத்துக்குட்பட்ட பள்ளபாளையம், கோயம்பள்ளி சோமூர், திருமாநிலையூர், மாயனூர் மணவாசி, சின்னதாராபுரம், நஞ்சைகாளக்குறிச்சி, மோஞ்சனூர் ஆகிய 7 வாய்க்கால்களை தூர்வாரும் பணிக்காக மொத்தம் ரூ.1.87 கோடியும், காவிரி வடிநிலக் கோட்டத்திற்குட்பட்ட பாப்புலர் முதலியார், கட்டளை, புது கட்டளை, மகாதானபுரம், படுகை மற்றும் சித்தலவாய், அரியாறு வடிநில கோட்டத்துக்குள்பட்ட கடவூர் தென்னிலை, மாவத்தூர்,  பன்னப்பட்டி, கிருஷ்ணராயபுரம் தாதம்பட்டி, பாப்பாக்காப்பட்டி, குளித்தலை மேலவெளியூர், கழுகூர் குளம் ஆகிய நீர்வழித்தடங்களும் தேர்வு செய்யப்பட்டு ரூ.5.50 கோடி  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 33 குடிமராமத்து பணிகளுக்கு ரூ.6,87,50,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT