கரூர்

கரூர் அருகே  குடிநீர் கேட்டு மக்கள் மறியல்

DIN

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலைமறியிலில் ஈடுபட்டதால் சேங்கல் - உப்பிடமங்கலம் சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள சின்னகிணத்துப்பட்டி, மதுக்கரை, குண்டாங்கள்பட்டி, கீரிக்கல்பட்டி ஆகிய கிராமங்களுக்கு சேங்கல் ஊராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அப்பகுதியினருக்கு கடந்த 10 நாட்களாக சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம். 
இதுதொடர்பாக அப்பகுதியினர் பலமுறை சேங்கல் ஊராட்சி மற்றும் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகளைச் சந்தித்து முறையிட்டு கோரிக்கை மனுக்கள் வழங்கியும் இதுவரை எந்த ஒருநடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த சின்னகிணத்துப்பட்டி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை காலை சேங்கல் - உப்பிடமங்கலம் சாலையில் மதுக்கரை நான்குசாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மாயனூர் போலீஸார் மற்றும் கிருஷ்ணராயபுரம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் அவர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேன்ஸ் திரைப்பட விழா: விருது வென்ற இயக்குநருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

கௌதம் கம்பீருக்கு வெற்றுக் காசோலை வழங்கிய ஷாருக்கான்..?

இந்த வாரம் கலாரசிகன் - 26-05-2024

குன்றேறி யானைப் போர் காணல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் பேட்டிங்!

SCROLL FOR NEXT